காஞ்சி பீட கலாசார மையம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

காஞ்சி பீட கலாசார மையம்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
 காஞ்சி பீட கலாசார மையம்

காஞ்சி காமகோடி பீடத்தின் கலாசார மையம், தேசிய தலைநகர், டில்லி யில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியின் அறிவுரையின்படி, வேதம் மற்றும் கலாசார வளர்ச்சிக்காக, டில்லியில் கலாசார மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த, 2017, செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தக் கட்டடம், நேற்று திறந்து வைக்கப்பட்டது.

தென்னிந்திய முறைப்படி, இந்தக் கட்டடத்தின் மைய மண்டபம் அமைந்துள்ளது. சொற்பொழிவுதெற்கு டில்லியில், அரை ஏக்கர் நிலத்தில், இந்த கலாசார மையத்துக்காக, நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஆதி சங்கரர், ஹிந்துக் கடவுளர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.வேதங்கள், ஸ்லோகங்களை வேத விற்பனர்கள் ஓத, கட்டடத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. பக்தி பாடல்களும் பாடப்பட்டன. விஜயேந்திர சரஸ்வதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

வடக்கு மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையே கலாசார பரிமாற்றத்துக்காகவும், தேச ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையிலும், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேதம், கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய மூன்று அடிப்படைகளில், இந்த மையம் செயல்படும்.வேதங்கள் கற்பதை ஊக்குவிக்கும் வகையில், இங்கு வேதங்கள் கற்றுத் தரப்படும். வேதங்கள் தொடர்பான பாடங்கள், ஹிந்துக்களுக்கு மட்டுமே கற்பிக்கப்படும். அதே நேரத்தில் சமஸ்கிருதம் மற்றும் வேதாந்தத்தை அனைவரும் கற்கலாம்.வேத விற்பனர்கள் மூலம், இங்கு அவ்வப்போது சொற்பொழிவுகள் நடத்தப்படும். அதே போல் வேத பாராயண நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.இந்திய கலாசாரம், பண்டைய மற்றும் நவீன அறிவியல் மற்றும் இலக்கியம் தொடர்பான ஆராய்ச்சிகள் குறித்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இசை நிகழ்ச்சிவேதம், கல்வியைதவிர, மருத்துவ உதவி அளிக்கும் வகையில், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளது. இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த மையத்தில் வேதம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பெறும் வசதியும், நுாலகமும் இடம் பெற்றுள்ளது.ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து மதம் குறித்து அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, இந்த மையம் வரப்பிரசாதமாக அமையும்.

மேலும், கர்நாடக இசை, பக்தி இசையை வளர்க்கும் வகையிலும், வட மாநில பாரம்பரிய இசையை வளர்க்கும் வகையிலும், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இத்துடன், தென்னிந்திய, ஆன்மிக பயணத்துக்கான உதவி மையமாகவும், இந்த கலாசார மையம் செயல்படும்.கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் விஜயா வங்கி, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஷபூர்ஜி பலோன்ஜி உள்ளிட்டவை, இந்த கலாசார மையம் அமைப்பதற்கு நன்கொடைகள் வழங்கியுள்ளன.யுவ யாத்திரைஇளைஞர்கள், பள்ளி - கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்மிகம் தொடர்பான ஆர்வத்தை உண்டாக்கும் வகையில், யுவ தீர்த்த யாத்திரை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி, நாட்டின் கலாசார மையங்கள், ஆன்மிகம் தொடர்பான இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு வார இறுதியிலும் மதுரா, பிருந்தாவனுக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X