எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

40, 'இ - சேவை' மையங்கள் தற்காலிகமாக மூடல்

Updated : டிச 02, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவால், 40 அரசு, 'இ - சேவை' மையங்கள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.தமிழக மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' வாயிலாக, அரசு, 'இ - சேவை' மையங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், 600க்கும் அதிகமான, அரசு இ - சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல் உட்பட, 80க்கும்
 40, 'இ - சேவை' மையங்கள் தற்காலிகமாக மூடல்

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவால், 40 அரசு, 'இ - சேவை' மையங்கள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தமிழக மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' வாயிலாக, அரசு, 'இ - சேவை' மையங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், 600க்கும் அதிகமான, அரசு இ - சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல் உட்பட, 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப் படுகின்றன.

அதில், பல, இ - சேவை மையங்களில், வாடிக்கையாளர் வருகை குறைவால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது:மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள, இ - சேவை மையங்களுக்கு, மக்கள் அதிகம் வருகின்றனர். ஆனால், ஒரு நபர் கூட வராத, சில, இ - சேவை மையங்கள் நிறைய இருந்தன.

இவற்றில், 40 மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.மாவட்டங்களில் சில மையங்களும், சென்னையில், மண்டல அலுவலகங்களை தவிர்த்து, வார்டுகளில் செயல்பட்ட மையங்களும் மூடப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றிய ஊழியர்கள், வேறு மையங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளனர். சில மையங்களை, வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
02-டிச-201909:06:26 IST Report Abuse
Indhuindian E - சேவை மையங்களை மூடிவிடுவது மிகவும் நல்லது. அதை உபயோகிப்பவர்கள் குறைவு என்பது மிகவும் தவறு. எந்த சேவை மையத்திலும் ஒரு வேலையும் செய்ய முடியாது - சில காரணங்கள் - கம்ப்யூட்டர் வேலை செய்ய வில்லை- இன்டர்நெட் கனக்ஷன் இல்லை -பிரின்டரில் இன்க் இல்லை -தேவையான கார்டு இல்லை- கரண்ட் இல்லை - பல பல . அப்படிப்பட்ட சேவையாற்ற மையம் தேவையா. இந்த சேவை மையங்களை தனியார் மயமாக்குங்கள் அப்பரும் எப்படி செயல்படுகிறது என்று பாருங்கள். தமிஷாக அரசின், சென்னை மாநகராட்சின் கையாலாகாத்தனம்
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
02-டிச-201908:14:05 IST Report Abuse
chennai sivakumar This is expected one. E seva in other locations either don't have proper trained staff or net connectivity. I live in a prominent location in Chennai and went to e seva for some work. Basically what is e seva? Any one can access the required service from the government dept through e seva. The boy told me to come very next day and he was simply sitting idle. Then i told him whether I will ask the bigboss to influence. He said not necessary and the following day i went again and he said please go the e seva attached to your area thasildhar. Then i said the government made many sevas for the purpose of reducing the crowd and also to ease the work for public which he didn't understand. Finally I am still to complete my job. The operators are to be trained and made aware the purpose of the e centre. This kind of no users will be there every where. For that you cannot close the services be it is temporary or பெர்மனெண்ட் Otherwise outsource like passport office at least in big cities. Things will move smooth.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X