பொது செய்தி

தமிழ்நாடு

மீட்பு பணிக்கு ஒரு லட்சம் போலீசார்: மாநிலம் முழுதும் கன மழை நீடிப்பு

Added : டிச 01, 2019
Advertisement

சென்னை: தமிழகம் முழுதும், கன மழை தொடர்வதால், மீட்பு பணிகளை மேற்கொள்ள, ஒரு லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை உட்பட, மாநிலத்தின் பல பகுதிகளிலும், இரண்டு நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழையால் ஆங்காங்கே சாய்ந்த மரங்களையும், அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. உத்தரவுகன மழை பெய்வது அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கலாம் என்பதால், இதுபோன்ற மீட்பு பணிகளை மேற்கொள்ள, மாநிலம் முழுதும், ஒரு லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

'இவர்களை, மண்டல ஐ.ஜி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு மீட்பு பணிகளுக்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்து தர வேண்டும்' என, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.அவசர போலீசின், '100' எண்ணை தொடர்பு கொள்வோருக்கு, உடனடியாக உதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் என, அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து, போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மீட்பு பணிகளுக்கான உபகரணங்கள் மற்றும் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

கமிஷனர் ஆய்வு
அதற்கேற்ப, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், நேற்று மழைநீர் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்து, மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, புளியந்தோப்பு, ஜீவா ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தேங்கி இருந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.அதன்பின், விஸ்வநாதன் அளித்த பேட்டி:மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட, அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து, மழை நீர் வெளியேற்றம் மற்றும் மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மரங்கள் விழுந்தால் உடனுக்குடன் அப்புறப்படுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர். சென்னை முழுதும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதிதீவிர படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு, ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

பிரத்யேக தொடர்பு எண்ஒவ்வொரு மாவட்டத்திலும், பயிற்சி பெற்ற, 22 கமாண்டோ தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன், மாநிலம் முழுவதும் உள்ள, 331 தீயணைப்பு நிலைய அதிகாரிகள், ரப்பர் படகுகள், நீட்டிப்பு ஏணிகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்பில் சிக்கும் பொதுமக்கள், 101 மற்றும் 044 - 2855 4309; 2855 4311; 2855 4313; 2855 4314; 2855 4376 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தீயணைப்பு துறை இயக்குனரான, டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X