பொது செய்தி

தமிழ்நாடு

'கேங்மேன்' தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு

Added : டிச 01, 2019
Advertisement

சென்னை: கன மழை காரணமாக, 'கேங்மேன்' பதவிக்காக, இன்றும், நாளையும் நடக்கவிருந்த, உடல் தகுதி தேர்வை, தமிழக மின் வாரியம் தள்ளி வைத்துள்ளது.

தமிழக மின் வாரியம், களப்பிரிவு பணிகளை மேற்கொள்ள, கேங்மேன் பதவிக்கு, 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக, இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், நவம்பர், 25 முதல், சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு துவங்கியது.

தற்போது, தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை உட்பட, 29 மாவட்டங்களில், இன்றும், நாளையும் நடக்க இருந்த, உடல் தகுதி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 'தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X