பொது செய்தி

இந்தியா

திரில் வெற்றி; தமிழகத்தை வீழ்த்தியது கர்நாடகா

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சூரத்: சையது முஷ்தாக் அலி டிராபி 'டுவென்டி-20' பைனலில், 1 ரன் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி, திரில் வெற்றி பெற்ற கர்நாடகா, கோப்பையை கைபற்றியது.குஜராத் மாநிலம் சூரத்தில், சையது முஷ்தாக் அலி டிராபி 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் பைனலில், தமிழகம், கர்நாடக அணிகள் மோதின. இதில் டாசில் வென்ற தமிழக அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. கர்நாடக அணியின்
Karnataka,Tamil Nadu, T20,final

சூரத்: சையது முஷ்தாக் அலி டிராபி 'டுவென்டி-20' பைனலில், 1 ரன் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி, திரில் வெற்றி பெற்ற கர்நாடகா, கோப்பையை கைபற்றியது.

குஜராத் மாநிலம் சூரத்தில், சையது முஷ்தாக் அலி டிராபி 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் பைனலில், தமிழகம், கர்நாடக அணிகள் மோதின. இதில் டாசில் வென்ற தமிழக அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. கர்நாடக அணியின் ராகுல்(22), மயாங்க் அகர்வால்(0) அஷ்வின் சுழலில் வீழ்ந்தனர்.

தேவ்தத் படிக்கல் 32 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார். ரோகன் காதம்(35), நாயர்(17) முருகன் அஷ்வின் சுழலில் நடையை கட்டினர். கேப்டன் மனீஷ் பாண்டே, 2 சிக்சர், 4 பவுண்டரி உதவியுடன் 45 பந்தில் 60 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி சார்பில் அஷ்வின், முருகன் அஷ்வின் தலா 2 விக்கெட் கைபற்றினர்.

இதனையடுத்து 181 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய தமிழக அணிக்கு, ஷாருக்கான்(16), ஹரி நிஷாந்த்(14) சுமாரான துவக்கம் தந்தனர். வாஷிங்டன் சுந்தர்(24), கேப்டன் தினேஷ் கார்த்திக்(20) நிலைக்காத போதும், அபரஜித்(40), அதிரடியாக விளையாடினார்.

கடைசி ஓவரில் 13 ரன் தேவை என்ற நிலையில், முதல் இரு பந்துகளில், அஷ்வின் அடுத்தடுத்து பவுண்டரி அடிக்க, 3 பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. 4வது பந்தில் ஒரு ரன் எடுக்க, 5வது பந்தில் விஜய் சங்கர்(44) ரன் அவுட்டானார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் மட்டுமே கிடைக்க, கர்நாடக அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று, கோப்பையை வென்றது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
02-டிச-201907:29:53 IST Report Abuse
Ambika. K Nalla news.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X