பொது செய்தி

தமிழ்நாடு

9 மாவட்டங்களுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை

Added : டிச 01, 2019
Advertisement

சென்னை: தமிழகம் முழுவதும், மழை கொட்டி வரும் நிலையில், 'ஒன்பது மாவட்டங்களில், இன்றும் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீர்நிலைகள் வேகமாக நிரம்பி, வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.---தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, பல மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, மிக அதிக கனமழைக்கான, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது.இந்த மாவட்டங்களில், நேற்று இரவு வரை, இடைவிடாமல் பல மணி நேரம் மழை கொட்டியது. 'ரெட் அலர்ட்' விடப்பட்ட மாவட்டங்களில், இன்று காலை வரை மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:குமரி கடலில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும் கனமழை நீடிக்கும். தமிழகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், இன்று கனமழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் தொடர்ந்து மிதமான மழை பெய்யும். புறநகர் பகுதிகளில், கனமழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

புறநகரில் வெள்ளம்சென்னையின் புறநகர் பகுதிகளான, தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பூந்தமல்லி, போரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், வடசென்னையில், திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளிலும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் மழை நீர், புதிதாக கட்டப்பட்ட மழை நீர் கால்வாய் வழியாக, ஏரிகளுக்கு சென்றுள்ளது. அதேநேரம், ஏரிகளை சுற்றிய பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியிருப்பதால், வீடுகளை சுற்றி, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஏரியை ஒட்டிய இடங்களில் குடியிருப்பவர்கள், தங்கள் வீடுகளுக்குள் வெள்ளம் வந்துவிடுமோ என்று பயந்து, ஏரிகளின் ஒரு பகுதியை உடைத்து, தண்ணீரை வெளியேற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பினதமிழகத்தில், 89 அணைகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பல மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், முக்கிய அணைகள் மீண்டும் நிரம்பி வழிய துவங்கியுள்ளன. அபாய கட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து, உபரிநீர் வெளியேற்றும் பணியும் துவங்கியுள்ளது. இந்த அணைகளின் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு, பொதுப்பணித்துறைக்கு, மாநில பேரிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.முதல்வர் இன்று ஆலோசனைமாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தலைமை செயலகத்தில் நடக்கவுள்ள இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், மாநில பேரிடர் ஆணையம், வருவாய், பொதுப்பணி, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 19 செ.மீ., கொட்டியது* நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது. கடலுார், துாத்துக்குடி, குறிஞ்சிப்படி, 17; மணிமுத்தாறு, 15; வேதாரண்யம், 14; செய்யார், உளுந்துார்பேட்டை, மதுராந்தகம், சிதம்பரம், தரங்கம்பாடி மற்றும் புவனகிரியில், 13 செ.மீ., மழை பெய்துள்ளது* தாம்பரம், பரங்கிப்பேட்டை, சத்யபாமா, மரக்காணம், பாம்பன், கடலுார், 12; புதுக்கோட்டை, ராமேஸ்வரம், விருதாச்சலம், மாமல்லபுரம், சென்னை கோட்டூர்புரம் மற்றும் மன்னார்குடியில், 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது* பண்ருட்டி, மயிலாப்பூர், திருத்துறைப்பூண்டி, திருச்செந்துார், சேத்தியாதோப்பு, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் பூந்தமல்லியில், 10 செ.மீ., மழை பதிவானது, புதுச்சேரியில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.வயலில் நீர் தேக்கம் தடுக்க குழு அமைப்பு தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல்களை, மழைநீர் சூழ்ந்து வருகிறது. மற்ற பல மாவட்டங்களிலும், மழையால் பயிர்கள் மூழ்கியுள்ளன. வயல்களில் தொடர்ந்து பல நாட்கள் மழைநீர் தேங்கினால், பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, வயல்களில் இருந்து நீரை வெளியேற்ற, விவசாயிகளுக்கு உதவுவதற்காக வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த குழுவினர், மழை முடியும் வரை, விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றும்படி, வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X