சம்பவம் செய்தி

தமிழ்நாடு

700 கிலோ கஞ்சா பறிமுதல்

Added : டிச 01, 2019
Advertisement
 700 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இருந்து கடல் வழியாக, இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மூவரை, போலீசார் கைது செய்து, 692 கிலோ கஞ்சா மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், வடூவூர் சோதனைச்சாவடி அருகே, நாகை, 'கியூ' பிரிவு போலீசார், நேற்று அதிகாலை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து திருச்சி வழியாக, வேதாரண்யம் நோக்கி வந்த டூரிஸ்ட் வேனை, சோதனையிட்டனர்.பயணியர் இருக்கைக்கு கீழ், 25 சாக்கு மூட்டைகளில், 692 கிலோ கஞ்சா இருந்தது. வேனில் இருந்த, 28 - 37 வயது ஆண்கள் மூவரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.

இதில், கோவையில் இருந்து வேதாரண்யம் சென்று, அங்கிருந்து படகு மூலம், இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிந்தது. இவர்களிடம் கஞ்சாவை பெற்றுக் கொள்ள, இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் வேதாரண்யம் வந்துள்ளனரா அல்லது வேதாரண்யத்தில் இருந்து, யார் மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட இருந்தது என, மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு, 70 லட்சம் ரூபாய். எனினும், இலங்கையில் அதன் மதிப்பு, 2 கோடி ரூபாய் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X