மதுரை: லஞ்ச புகாரில் சிக்கிய, மதுரை அரசு மருத்துவமனை நர்ஸ், தற்கொலை செய்து கொண்டார்.மதுரை அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தவர், கார்த்திகா, 32. கணவரை பிரிந்து, 8 வயது குழந்தை, தாயுடன் வசித்து வந்தார். பிரசவ வார்டில் பணியாற்றிய இவர் மீது, சில நாட்களுக்கு முன், லஞ்சப் புகார் எழுந்தது. இதனால், வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement