சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'குட்கா' கடத்தல் சம்பவம்: துணை போன 4 போலீசார் சஸ்பெண்ட்

Added : டிச 01, 2019
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'குட்கா' பொருட்கள் கடத்தலுக்கு, துணை போன நான்கு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.நவ., 29 இரவு, கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து, கிருஷ்ணகிரி நோக்கி, ஒரு மினி வேன் வந்தது. குருபரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, எஸ்.எஸ்.ஐ., சிவகுமார், 52, ஏட்டுகள் சரவணன், 45, முருகன், 42, ஆகியோர், வேனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'குட்கா' பொருட்கள் கடத்தலுக்கு, துணை போன நான்கு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

நவ., 29 இரவு, கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து, கிருஷ்ணகிரி நோக்கி, ஒரு மினி வேன் வந்தது. குருபரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, எஸ்.எஸ்.ஐ., சிவகுமார், 52, ஏட்டுகள் சரவணன், 45, முருகன், 42, ஆகியோர், வேனை சோதனை செய்தனர்.அதில், 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. வேன் டிரைவர் சுந்தரமூர்த்தி, 30, என்பவரிடம் பேரம் பேசி, 1.50 லட்சம் ரூபாயை, மூன்று போலீசாரும் லஞ்சமாக பெற்று, மறுநாள் காலை, 'குட்கா' பொருட்களுடன் மினி வேனை விடுவித்தனர்.சேலம் நோக்கிச் சென்ற மினி வேனை, கிருஷ்ணகிரி - மோட்டூர் சந்திப்பில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிடித்தனர்.

இதில், குருபரப்பள்ளி போலீசாருக்கு, 1.50 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தது தெரிந்தது.இது குறித்து, எஸ்.பி., பண்டிகங்காதருக்கு தகவல் தெரிவித்த போலீசார், வேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். இதையடுத்து, எஸ்.எஸ்.ஐ., சிவகுமார் உள்ளிட்ட, மூன்று போலீசாரையும், 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார். மேலும், இது குறித்து தகவல் தெரிவிக்காத, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு உதயகுமார், 38, என்பவரையும், 'சஸ்பெண்ட்' செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X