சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடுமலை கவுசல்யாவின் தாய், பாட்டி கைது: பழநியில் கஞ்சா விற்றதாக புகார்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 உடுமலை கவுசல்யாவின் தாய், பாட்டி கைது:  பழநியில் கஞ்சா விற்றதாக புகார்

பழநி: உடுமலையில், கவுரவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாய், பாட்டி ஆகியோர் கஞ்சா விற்றதாக, பழநியில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி பாப்பம்பட்டி அருகே குப்பம்பாளையம் பகுதியில், கஞ்சா விற்றதாக, கோதையம்மாள், 73, என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவரது மகள் அன்னலட்சுமி, 40, கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. அன்னலட்சுமியையும் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கவுரவ கொலைகுப்பம்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி, அன்னலட்சுமி ஆகியோரின் மகள் கவுசல்யா. கல்லுாரியில், உடன் படித்த, திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த சங்கரை காதலித்து, திருமணம் செய்தார். ஜாதி மாறி திருமணம் செய்ததால், கூலிப்படை மூலம், 2016 மார்ச்சில், சங்கரை, சின்னச்சாமி கொலை செய்தார்.இதில், சின்னச்சாமி உட்பட, ஆறு பேருக்கு துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அன்னலட்சுமி உட்பட மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கால், நலிந்த நிலைக்கு சென்ற அன்னலட்சுமி, பழநி, எம்.ஜி.ஆர்., நகரில் வசித்தார்.

இதனால், கணவர் சின்னச்சாமி செய்து வந்த கஞ்சா விற்பனையை மீண்டும் துவங்கி நடத்தி வந்தார்.ரூ.30 லட்சம்கோவை, வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி யில், பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று, தாமஸ் வீதியில் சோதனை நடத்தினர்.

அப்பகுதியைச் சேர்ந்த, சகோதரர்கள், பிரமோத் குமார், 37, வினோத்குமார், 28, வீடு மற்றும் கடைகளில், தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள், பண்டல் பண்டல்களாக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 1.5 டன் அளவிலான பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.இதன் மதிப்பு, 30 லட்சம் ரூபாய். பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்திருந்த சகோதரர்களை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
04-டிச-201904:51:19 IST Report Abuse
கதிரழகன், SSLC அப்புறம் இந்த கவுசல்யா சொந்த சாதியிலேயே ஒருத்தர மறுமணம் செஞ்சுக்கிட்டதா தகவல். இத முதல்லயே செஞ்சிருந்தா இத்தினி பேர் செத்திருப்பாகளா ன்னு நெனச்சேன்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-டிச-201903:50:56 IST Report Abuse
meenakshisundaram ஆஹா வந்துட்டாங்கய்யா ,வந்துட்டாங்க எங்கே போச்சு நம்ப போராளிகள் கூட்டம் ?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-டிச-201923:02:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கவுசல்யாவின் தாய், பாட்டி ஆகியோர் கஞ்சா விற்றதாக, பழநியில் கைது செய்யப்பட்டனர். - ஜெயலலிதாவின் ஆட்சி அமோகமாக நடக்கிறது.
Rate this:
Share this comment
vasanthan - Moscow,ரஷ்யா
04-டிச-201907:57:08 IST Report Abuse
vasanthanபொய்ஹிண்டுபுரம் - இந்த கூட்டத்துக்கு வாய்தா வாங்குனது போதும் மூல பத்திரம் என்னாச்சி??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X