சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை டிரைவர் தாறுமாறு பெண் உட்பட இருவர் பலி

Added : டிச 01, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கன்டெய்னர் லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் உட்பட இருவர் பலியாகினர். மது போதையில் இருந்த டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் சென்னப்பன், 61; முன்னாள் ராணுவ வீரர். ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.இவர், 'பஜாஜ் சிடி - 100' இரு சக்கர வாகனத்தில், நேற்று மாலை, 3:30 மணிக்கு, கிருஷ்ணகிரி நோக்கி, டோல்கேட் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன், கிருஷ்ணகிரி திருமலை நகரைச் சேர்ந்த சுகுமாரன் என்பவரின் மனைவி பிரமிளா, 51, உறவினர் பெண்ணுடன், 'ஸ்கூட்டி' யில் பின்னால் அமர்ந்து சென்றார்.அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த, கன்டெய்னர் லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்து, தற்காலிக டோல்கேட் வசூல் மைய கூண்டை இடித்து தள்ளி, சென்னப்பன் மீது ஏறியது.இதைப் பார்த்த பிரமிளா, அவசரமாக ஸ்கூட்டியில் இருந்து இறங்கி உள்ளார். சென்னப்பன் மீது ஏறிய லாரி, நின்று கொண்டிருந்த பிரமிளா மீதும் மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.ஸ்கூட்டியில் சென்ற பெண், முன்னால் சென்று விட்டதால், உயிர் தப்பினார். தற்காலிக டோல்கேட் கூண்டில், பணியில் இருந்த கல்லுக்குறுக்கியைச் சேர்ந்த கவிதா, 34, என்பவர் படுகாயங்களுடன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், லாரி டிரைவரான, சிவகுமார், 37, என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மது போதையில் இருந்ததால், லாரியை கட்டுப்படுத்த முடியாமல் போனது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X