சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புது மாப்பிள்ளை கொலை நகை, பணம் கொள்ளை

Added : டிச 01, 2019
Advertisement

திருவண்ணாமலை: புது மாப்பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த, அரடாப்பட்டைச் சேர்ந்தவர் உதயசூரியன், 30; திருவண்ணாமலையில் மருந்து கடை வைத்துள்ளார். திருமணமாகி, ஒன்றரை மாதம் ஆகிறது. நேற்று முன்தினம் இரவு, கடையை மூடி, வீட்டுக்கு கிளம்பினார்.எடப்பாளையம் ஏரிக்கரை அருகே, அவரை ஒரு கும்பல் வழிமறித்து, அவர் வைத்திருந்த பணம், அணிந்திருந்த நகையை கொள்ளையடித்து, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பியது.நேற்று காலை, அவ்வழியாக சென்றவர்கள், உதயசூரியனின் சடலத்தை பார்த்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் விவசாயி கொலை
புதுக்கோட்டை, தேனிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன், 50; மனைவி பானுமதி, 45. பெண் விவசாயியான இவர், வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.நேற்று காலை, பானுமதி வழக்கம் போல, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். மாலை வெகு நேரமாகியும், பானுமதி வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். அப்போது, அவர் தென்னதிரையன்பட்டி தைலமரக் காட்டுக்குள், வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். கணேஷ்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X