பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் 'சூறாவளி' : படகுகள் நொறுங்கின

Added : டிச 01, 2019
Share
Advertisement
ராமேஸ்வரம்: கன்னியாகுமரி கடல் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மன்னார் வளைகுடா கடலில் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தது.இதனால் ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென் கடற்கரையில் நிறுத்தி
 ராமேஸ்வரத்தில் 'சூறாவளி' :  படகுகள் நொறுங்கின

ராமேஸ்வரம்: கன்னியாகுமரி கடல் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மன்னார் வளைகுடா கடலில் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தது.இதனால் ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென் கடற்கரையில் நிறுத்தி இருந்த படகுகளின் நங்கூர கயிறு அறுந்து அப்துல்கான், மாடசாமி, புகான், அயுப்கான், நாவஸ்கான், ராஜூ, நாசீர் ஆகியோரது 7 படகுகள் கரை ஒதுங்கி பலத்த சேதமடைந்தது. மேலும் 70 படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமாகியது.மண்டபம் மீனவர் சங்க செயலர் ஜி.விஜயரூபன் கூறுகையில், 1978க்கு பிறகு நேற்று அதிகாலை திடீரென வீசிய சூறாவளியால் அதிகளவில் படகுகள் சேதமடைந்தது. படகுகளை பழுது நீக்கிட ஒரு கோடி ரூபாய் செலவாகும். படகு உரிமையாளர்களுக்க இழப்பீடு தொகை வழங்கியும், இப்பகுதியில் துாண்டில் வளைவுபாலம் அமைக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X