பொது செய்தி

இந்தியா

ஓட்டல் தொழிலாளிகளுக்கு ஹெல்த் கார்டு

Added : டிச 01, 2019
Advertisement

சபரிமலை: 'சபரிமலையில் ஓட்டல் தொழிலாளிகளுக்கு ஹெல்த்கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உணவு பொருட்கள் வாங்கி சாப்பிடும் போது கவனம் தேவை' என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் சபரிமலை வழியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தினமும் சோதனை நடத்துகின்றனர். மருத்துவ பரிசோதனைகள் நடத்தி தொழிலாளர்கள் ஹெல்த்கார்டு வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஓட்டல்களில் பழைய மற்றும் கெட்டு போன உணவு பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவை வெளியே கொட்டப்படுகிறது. மேலும் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

தர்பூசணி, அன்னாசி பழத் துண்டுகளை மூடி வைத்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு உதவும் வகையில் பெண்கள் அமைப்பான குடும்பஸ்ரீ நடத்தும் ஓட்டல்கள் பம்பை மற்றும் நிலக்கல்லில் திறக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X