உலக செய்திகள்

Added : டிச 01, 2019
Advertisement

விமான விபத்தில்9 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள, சாம்பர்லைன் விமான நிலையத்தில் இருந்து, சிறிய ரக விமானம் ஒன்று, நேற்று புறப்பட்டது. இதில், 12 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே, விபத்தில் சிக்கி, கீழே விழுந்து நொறுங்கியது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட, ஒன்பது பேர் பலியாகினர்; படுகாயம் அடைந்த மூன்று பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்: நேபாளத்தில் ஆறு பேர் பலி
காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவ மாயா என்பவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி, அவரது குடும்பத்தினர் சென்றனர். வழியில் வந்த ஒரு லாரி, ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில், ஆம்புலன்சில் இருந்த டிரைவர் உட்பட, ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

பாக்., அருங்காட்சியகத்தில்புத்தர் சிலை
இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள அருங்காட்சியகத்தில், மிக பழமையான புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில், புத்தரின் தலை பகுதி மட்டுமே இடம் பெற்றுள்ளது. சாந்து கலவையில் செய்யப்பட்ட, மிக அரிதானதாக கருதப்படும் இந்த சிலை, தொல்பொருள் துறையினர் நடத்திய ஆய்வில், 1960ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்லாமாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த சிலை, 1997ல், அங்கிருந்து அகற்றப்பட்டது. தற்போது, 22 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அந்த சிலை, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X