கோர்ட் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி வாலிபர் பலி ரூ.1.10 கோடி இழப்பீடு

Added : டிச 01, 2019
Advertisement
 லாரி மோதி வாலிபர் பலி ரூ.1.10 கோடி இழப்பீடு

சென்னை: தண்ணீர் லாரி மோதி இறந்த இளைஞரின் பெற்றோருக்கு, 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, எஸ்பிளனேடு பகுதியை சேர்ந்த பத்மகுமார் - யசோதா தம்பதியின் மகன் ராகேஷ், 28. இவர், 2012, அக்., 30ல், தன் மோட்டார் பைக்கில், சென்னை, சர்தார் படேல் சாலையில், சென்று கொண்டிருந்தார்.அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி, ராகேஷ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். மகனின் இறப்புக்கு இழப்பீடு கோரி, ராகேஷின் பெற்றோர், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், வழக்கு தொடர்ந்தனர்.நீதிபதி எஸ்.உமாமேகஷ்வரி முன், இந்த வழக்கு விசாரணை நடந்தது.

விசாரணையின் போது, 'மனுதாரரின் மகன், சாலை விதிகளை மதிக்காமல், ஹெல்மெட் அணியாமல், அதிவேகமாக மோட்டார் பைக்கை ஓட்டினார். விபத்திற்கு அவர் தான் காரணம்' என, தண்ணீர் லாரியின் இன்சூரன்ஸ் நிறுவனமான, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வாதிட்டது.இருதரப்பு விசாரணைக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காவல் துறையின், எப்.ஐ.ஆர்., - உடற்கூறு ஆய்வு சான்றிதழ், நேரடி சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த விபத்திற்கு, தண்ணீர் லாரி தான் காரணம் என்பது நிரூபணம் ஆகிறது. லாரி டிரைவரின் அலட்சியம் மற்றும் அஜாக்கிரதையால், மனுதாரரின் மகன் இறந்துள்ளார். எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 1.10 கோடி ரூபாயை, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X