அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்! பா.ஜ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
'தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் அரசகுமார் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., மேலிடத்தை, கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். புதுக்கோட்டை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா, நேற்று புதுக்கோட்டையில் நடந்தது. விழாவில், தமிழக பா.ஜ., துணை தலைவர் அரசகுமார்

'தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் அரசகுமார் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., மேலிடத்தை, கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா, நேற்று புதுக்கோட்டையில் நடந்தது. விழாவில், தமிழக பா.ஜ., துணை தலைவர் அரசகுமார் பேசியதாவது:உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் ஸ்டாலின். எங்களுக்கு நிரந்தர தலைவர் ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால், ஒரே இரவில், கூவத்துாருக்குள் புகுந்து, முதல்வர் பதவியை தட்டி பறித்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்யவில்லை. வியூகம்ஆட்சி அதிகாரத்தை, ஜனநாயகத்தின் வாயிலாக பெற வேண்டும் என, பொறுமையாக இருக்கிறார்; பொறுத்தார் பூமி ஆள்வார். அவர் முதல்வராகும் திருநாள் மலரும். ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர். எம்.ஜி.ஆருக்கு பின் அழகான தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., நீடிக்கிறது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க, பா.ஜ., மேலிடம், பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. தமிழகத்தில், தி.மு.க.,வை எதிரி கட்சியாக, பா.ஜ., பாவித்து வருகிறது.

வலியுறுத்தல்
இந்நிலையில், ஸ்டாலினை அடுத்த முதல்வர் என புகழ்ந்து, அரசகுமார் பேசியது, தமிழக பா.ஜ.,வில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவருக்கு எதிரான கோஷ்டியினர், பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு தகவல் அனுப்பி வலியுறுத்தி வருகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-201906:47:06 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து ஸ்டாலின் தான் ஒரு இலவு காத்த கிளி என்று நம்புகிறார் இந்த லட்சணத்தில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்று பாஜக சொல்லுது ..இனி தாமரை பயங்கர சப்தத்துடன் ..பிச்சுக்கிட்டு மலரும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X