சென்னை: 'சென்னை புதிய விமான நிலையத்திற்கான இடத்தை, விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னையில், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பு கைகூடி வரும் நேரத்தில், விலகிச் சென்று விடுகிறது.சென்னையின் வளர்ச்சிக்கு, மிகவும் அவசியமான, இரண்டாவது விமான நிலையப் பணிகள் தொடர்ந்து தாமதமாவது, வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, முதற்கட்டமாக, புதிய விமான நிலையத்திற்கான இடத்தை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், உடனே தேர்வு செய்ய வேண்டும். திட்ட அறிக்கை தயாரிப்பு, கட்டுமான பணிகள் போன்றவற்றை, கால அட்டவணை வகுத்து, அதன்படி செய்து முடிக்க வேண்டும். இப்பணிகளை விரைவுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், மத்திய - மாநில அரசுகள், விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளை கொண்ட, ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.