பாதாள சாக்கடை பணியால் பள்ளம்; ஓ.எம்.ஆர்., வாகன ஓட்டிகள் அவதி

Added : டிச 01, 2019
Advertisement
 பாதாள சாக்கடை பணியால் பள்ளம்; ஓ.எம்.ஆர்., வாகன ஓட்டிகள் அவதி

திருப்போரூர் : பாதாள சாக்கடையை முறையாக அமைக்காததால், சாலையில் பள்ளம் விழுந்து, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

திருப்போரூர் பேரூராட்சியின், 15 வார்டுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்குள்ள வீடுகள் மற்றும் வணிக கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், முறையாக வெளியேற்றப்படாமல் குளம், ஏரிகளில் விடப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் நீராதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால், இப்பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, 53 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணிகள், ஓராண்டாக நடந்து வருகின்றன.

இதில், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர் ஆகிய பகுதிகளில், ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் பல தெருக்களின் நடுவில், 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் பதிக்கப்பட்ட இடத்தில், முறையாக மண் கொட்டி, சமன் செய்யவில்லை. இதனால், சமன் செய்யப்படாத இடத்தில் வாகனங்கள் சென்று வந்ததால், சாலை நடுப் பகுதி வரை, பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கந்தசுவாமி கோவில் மேற்கு மாடவீதி, ஓ.எம்.ஆர்., சாலை அமைந்துள்ள பிரதான சாலையில், 'மெகா' பள்ளங்கள் ஏற்பட்டு, அவற்றில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாகவே இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அங்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.ஓ.எம்.ஆர்., சாலையில், இதுபோல், 2 கி.மீ., பள்ளம், மேடாக சாலை உள்ளது. பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்த தாரர்களும், பேரூராட்சி நிர்வாகத்தினரும், இதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X