பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் முக்கிய சாலைகளில் தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்

Added : டிச 01, 2019
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் நடுவே, தடுப்பு அமைக்கும் பணி நடக்கிறது.

காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில், போக்குவரத்தை சீரமைக்கும் வகையில், சாலை நடுவே, சிமென்ட் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.வழக்கமாக, வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோவில் திருவிழாவின் போது, அதிகப்படியான பக்தர்கள் வருகையால், அந்த தடுப்புகள் அகற்றப்படும். திருவிழா முடிந்ததும், மீண்டும், அதே இடத்தில் வைக்கப்படும்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் திருகுணா கூறியதாவது:சாலை தடுப்பை, கோவில் திருவிழாவிற்காக எடுப்பதும், மீண்டும் வைப்பதும் சிரமமாக இருக்கிறது. இதற்கு, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சாலை நடுவே பள்ளம் தோண்டி, 1 அடி ஆழத்திற்கு இரும்பு குழாய் பதிக்கப்பட்டு, சாலை மூடப்படும். தடுப்பு அமைக்கப்படுவதாக இருந்தால், இரும்பு தடுப்பு அடியில் சிறு குழாய் வைத்து, இரும்பு குழாயில் பொருத்தப்படும். இவற்றை எளிதாக வைக்கலாம், எடுக்கலாம்.காந்தி சாலை, மூங்கில் மண்டபம் முதல் இரட்டை மண்டபம் வரை, நான்கு ராஜவீதிகளில், இதற்கான வேலை நடக்க இருக்கிறது. தனியார் பங்களிப்பு மூலம் நடக்கும் இப்பணி, அடுத்த மாதம் முடிந்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X