பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி கலெக்டர் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா அவசியம்

Added : டிச 01, 2019
Advertisement

காஞ்சிபுரம் : மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட, அதன் வளாகத்தில் உள்ள பெரும்பாலான அலுவலகங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இயங்கி வருகின்றன.இந்த வளாகத்தில், ஊரக வளர்ச்சி முகமை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உட்பட, பல்துறை அலுவலகங்கள் இயங்குகின்றன.இங்குள்ள, எஸ்.பி., அலுவலகத்திலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதனால், அலுவலகங்களில் உள்ள கோப்புகளுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதாக விமர்னம் எழுகிறது.

அனைத்து அலுவலகங்களுக்கும் தலைமையிடமாக இருக்கும், கலெக்டர் அலுவலகத்தில்கூட எந்த கண்காணிப்பு கேமரா இல்லாமல் இருப்பது, பாதுகாப்பு குறைவாக இருப்பதை காட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X