பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா அரசு விடுதிக்கு செல்ல சாலை நடுவே வழி அமையுமா?

Added : டிச 01, 2019
Advertisement

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அரசு சுற்றுலா விடுதிக்கு, கிழக்கு கடற்கரை சாலை மையதடுப்பில், குறுக்கில் கடக்க இடைவெளி இல்லாததால், விபத்து ஏற்பட்டு வருகிறது.

மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, விடுதி வளாகம் உள்ளது. இதன் அருகே, பெட்ரோல், 'பங்க்' இயங்குகிறது.சுற்றுலா வரும் பயணியர், மேற்கண்ட விடுதியில் தங்குகின்றனர். இச்சாலையில் வரும் வாகன ஓட்டிகள், வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப, பங்க்குக்கு வருகின்றனர்.கிழக்கு கடற்கரை சாலை, நான்குவழிப் பாதை, மைய தடுப்பு என, அமைந்துள்ள நிலையில், புதுச்சேரி தட பகுதியில் உள்ள விடுதிக்கு செல்ல, சென்னை தட வாகனங்கள், குறுக்கில் கடக்க இயலாது.ஆனால், இதே தடத்தில் உள்ள தனியார் விடுதிக்கு குறுக்கில் கடக்க, மைய தடுப்பில், சாலை மேம்பாட்டு நிறுவனம், இடைவெளி விட்டுள்ளது.

இச்சிக்கலால், வாகனங்கள், சற்று துாரம் சென்று, இடைவெளியில் கடந்து, புதுச்சேரி தடத்தில் ஒருவழி பாதையில், விபத்து ஆபத்துடன் விடுதிக்கும், 'பங்க்'குக்கும் செல்கின்றன.ஒருவழி தடத்தில், நீண்டதுாரம் கடக்கும் நிலையில், எதிரில் வரும் வாகனங்கள் மோதி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கடந்த, 20ல், பெட்ரோல், 'பங்க்'கிலிருந்து, ஒருவழி தடத்தில் சென்றபோது, இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில், பெண் உள்ளிட்ட நான்கு பேர் இறந்தனர். விபத்து அபாயம் கருதி, விடுதி, பங்க் அருகே, இடைவெளி ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X