பிரதான சாலையில் அபாய பள்ளம்; அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்

Added : டிச 01, 2019
Advertisement

காஞ்சிபுரம் : சென்னை செல்லும் கம்மாளத் தெருவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை செல்லும் கம்மாள தெரு பிரதான சாலையில், குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க, கடந்த வாரம் நகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டினர்.அந்த பள்ளத்தை முழுமையாக மூடாததால், மழைக்கு பெரிய பள்ளமாக மாறிவிட்டது. இந்த சாலை வழியாக ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் போன்ற பகுதி களுக்கு, ஏராளமானோர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்கின்றனர், சென்னை செல்லும் பஸ்கள், கார்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன.

தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையிலுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்காமல் இருப்பது, பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:சென்னைக்கு செல்லும் முக்கிய சாலையாக இருக்கிறது. வேலை செய்ய தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இருவழிச் சாலையாக இருப்பதால், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. அதே போல், கார்கள் பள்ளத்தில் சிக்கி சேதமும், இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.பொது மக்கள் நலன் கருதி, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X