பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வராத நவீன கழிப்பறை

Added : டிச 01, 2019
Advertisement

காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவில் அருகில், பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பறை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் பாரம்பரிய நகர மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ஏகாம்பர நாதர் கோவில், காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களுக்கு வரும் யாத்ரீகர்களுக்கு வசதியை ஏற்படுத்த, நவீன கழிப்பறைகள், பொருட்கள் பாதுகாப்பு அறைகள், காலணிகள் அறைகள் போன்றவை கட்டப்பட்டன.இதில், வரதராஜ பெருமாள் கோவில் அருகில் உள்ள கழிப்பறை, அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

அதே போல், ஏகாம்பர நாதர் கோவில் அருகில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.இதனால், வெளி மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க சிரமப்படுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தனியார் கல்யாண மண்டபம் மற்றும் கட்டண கழிப்பறைகளில் அதிக தொகை வசூல் செய்கின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து, கேரளா அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், காஞ்சிபுரம் கோவில்களில் தரிசனம் செய்து விட்டு செல்வர்.அவர்கள் குளிக்க, இயற்கை உபாதை கழிக்க, ஒரு நபருக்கு, 100 ரூபாய் வீதம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.இதனால், நகராட்சி புதிய கழிப்பறையை பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X