காஞ்சிபுரம் : இரு சுகாதார நலப்பணி துணை இயக்குனர்களுக்கு, அத்துறை நிர்வாகம் இடமாறுதல் அளித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு சுகாதார மாவட்டங்களாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இயங்கி வந்தன. இதற்கு, இரு சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர்களை அத்துறை நிர்வாகம் நியமித்து இருந்தது.சமீபத்தில், செங்கல்பட்டு தனி மாவட்டமாக, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., துவக்கிய பின், தமிழகம் முழுதும், 24 சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர்களை அத்துறை நிர்வாகம் இடமாறுதல் அளித்துள்ளது.
இதில், காஞ்சிபுரம் சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனராக இருந்து வந்த செந்தில்குமார் என்பவரை, புதிதாக துவங்கிய செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், செங்கல்பட்டு துணை சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனராக இருந்த பழனி என்பவரை, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனராக அத்துறை நிர்வாகம் இடமாறுதல் அளித்துள்ளது.இவர்கள் இருவரும், இந்த வாரத்தில் பொறுப்பேற்க உள்ளனர்.