பொது செய்தி

தமிழ்நாடு

அதிருப்தியில் ரேஷன் ஊழியர்கள்

Added : டிச 02, 2019
Advertisement

மதுரை: நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ரேஷனில் பொட்டலம் முறை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாததால் ரேஷன் ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

கூட்டுறவு, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 13 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் ஊழியர்களுக்கு அரசு இளநிலை உதவியாளருக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது. அதே பணி செய்யும் கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அந்த சம்பளம் இல்லை.மேலும் முறைகேடுகளை தவிர்க்க ரேஷன் பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இவை உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தினர். அரசு நிறைவேற்றாத நிலையில் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலர் ஜெயசந்திரராஜா கூறியதாவது:பல போராட்டங்களை நடத்தியும் அரசு பேச்சுக்கு அழைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த வாரம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டோம். டிச., 6ல் கறுப்பு உடையணிந்து பணிபுரிவோம். டிச.,13ல் திருச்சியில் உண்ணாவிரதம் நடத்தப்படும். காலவரையற்ற போராட்டத்திலும் ஈடுபடுவோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X