சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனியில் ரயில்வே சுரங்கபாதையில் மழை நீர் தேங்குவதை கண்டித்து, கிராமத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். கீழக்கண்டனியில் இருந்து மேலவெள்ளந்தி ரோட்டில் இருந்த ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றினர். இதற்கு மாற்றாக சுரங்கபாதை அமைத்தனர். அங்கு மழைக்காலங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்குவதால், வாகனங்கள் செல்லமுடியாமல் சிரமம் அடைந்தனர். இதற்கு நிரந்தர தீர்வு கோரி, நேற்று மாலை 5:00 மணிக்கு அப்பகுதியினர் கீழக்கண்டனி ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ராமேஸ்வரம் - திருச்சி ரயிலை மறித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு சென்றது.