பொது செய்தி

தமிழ்நாடு

தரைப்பாலத்தில் தண்ணீர்; போக்குவரத்து துண்டிப்பு

Added : டிச 02, 2019
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே, தரைபாலத்தில் தண்ணீர் செல்வதால், 10 கிராமங்களுக்கு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு அடுத்த, ரெட்டிப்பாளையம், குருவன்மேடு ஆகிய பகுதிகளில், தரைப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, ரெட்டிப்பாளையம், குருவன்மேடு, வேண்பாக்கம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். தற்போது, அரசு பஸ்
 தரைப்பாலத்தில் தண்ணீர்; போக்குவரத்து துண்டிப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே, தரைபாலத்தில் தண்ணீர் செல்வதால், 10 கிராமங்களுக்கு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த, ரெட்டிப்பாளையம், குருவன்மேடு ஆகிய பகுதிகளில், தரைப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, ரெட்டிப்பாளையம், குருவன்மேடு, வேண்பாக்கம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். தற்போது, அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், . செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில் ஆகிய இடங்களுக்கு, அத்தியாவசிய தேவை உட்பட பல்வேறு தேவைகளுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

அதன்பின், ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த மக்கள், சிங்கபெருமாள்கோவில் செல்வதற்கு, செங்கல்பட்டு வழியாக வந்து செல்கின்றனர். குருவன்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள், வடக்குப்பட்டு, சிங்கபெருமாள்கோவில் வழியாக, செங்கல்பட்டு வந்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X