பொது செய்தி

தமிழ்நாடு

நீஞ்சல் மடுவு அணைக்கட்டில் தண்ணீர் வெளியேற்றம்

Added : டிச 02, 2019
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு, நீஞ்சல் மவுடு அணைக்கட்டில், வினாடிக்கு 3,300 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி உட்பட 22க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி, நத்தம் பகுதியில் உள்ள, நீஞ்சல் மடுவு அணைக்கட்டுக்கு வந்து சேருகிறது.இங்கிருந்து, களத்துாரான் கால்வாய் மூலமாக, பொன்விளைந்தகளத்துாருக்கு தண்ணீர் செல்கிறது. சில தினங்களாக பெய்த மழையில், நீஞ்சல் மடுவு அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து. அதன்பின், நேற்று, வினாடிக்கு 3,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இங்கு வெளியேற்றப்படும் தண்ணீர், பொன்விளைந்தகளத்துார் ஏரி மற்றும் பாலாற்றுக்கு செல்கிறது.இந்த பகுதியை, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிஸ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பிரசன்னபிரபு ஆகியோர் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X