சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்போரூர் அருகே கார்கள் மோதி இருவர் பலி

Added : டிச 02, 2019
Advertisement
 திருப்போரூர் அருகே கார்கள் மோதி இருவர் பலி

திருப்போரூர் : திருப்போரூர் அருகே, ஓ.எம்.ஆர்., சாலையில், இரண்டு கார்கள் மோதிய விபத்தில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே நேற்று இறந்தனர்.

கேரளாவைச் சேர்ந்தவர், ராஜசேகர்.65; இவர், மனைவி சாந்தா.60. மற்றும் கல்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனர் கண்ணன், 35, ஆகியோர், டாடா இண்டிகோ காரில் நேற்று, காலை, 8:00 மணிக்கு, கல்பாக்கத்திலிருந்து, மீனம்பாக்கத்தை நோக்கி, ஓ.எம்.ஆர். சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். கண்ணன் காரை ஓட்டிச் சென்றார்.

கருங்குழிபள்ளம் கிராமத்தில் எதிர் திசையில், சென்னை, மீனம்பாக்கத்திலிருந்து, புதுச்சேரி நோக்கி வந்த, 'இனோவா' கார், நிலைத் தடுமாறி, அறை அடி உயரத்தில் உள்ள சாலை மீடியன் மேல் ஏரி, கண்ணன் ஓட்டி வந்த கார் மீது, பக்கவாட்டில் மோதியது.இதில், கார் ஓட்டுனர் கண்ணன் மற்றும் ராஜசேகர் மனைவி சாந்தா சம்பவ இடத்திலியே இறந்தனர். ராஜசேகர் பலத்தகாயம் அடைந்தார்.

திருப்போரூர் போலீசார் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, காரின் லாக்கை உடைத்து கார் உள்ளே இருந்தவர்களை வெளியே எடுத்தனர்.ராஜசேகரை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்த இருவர் சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.மேலும், இனோவோ காரை ஓட்டி வந்த சரவணனை திருப்போரூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X