அடிப்படை கட்டமைப்பு துறையில் விரைவில் 10 புதிய திட்டங்கள்

Added : டிச 02, 2019
Share
Advertisement
புதுடில்லி: ''இம்மாத இறுதிக்குள் அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த 10 புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்'' என மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.அவர் மும்பையில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது:நாட்டின் வளர்ச்சிக்கு குடிநீர் கல்வி மருத்துவமனை சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது

புதுடில்லி: ''இம்மாத இறுதிக்குள் அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த 10 புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்'' என மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

அவர் மும்பையில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது:நாட்டின் வளர்ச்சிக்கு குடிநீர் கல்வி மருத்துவமனை சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.அதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு துறையில்100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சாத்தியமாகக் கூடிய திட்டங்களை உருவாக்குவதில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது.திட்டங்களுக்கான நிதியாதாரம் கிடைத்ததும் ஒவ்வொன்றாக செயல்பாட்டிற்கு வரும். அதன்படி டிச.,15க்குள் அடிப்படை கட்டமைப்பு துறையில் குறைந்தபட்சம் 10 திட்டங்கள்குறித்த அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X