அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் வளர்ச்சியை சிதைக்கிறார்கள்: அர்ஜுன் சம்பத் பாய்ச்சல்

Added : டிச 02, 2019
Advertisement
 தமிழகத்தின் வளர்ச்சியை சிதைக்கிறார்கள்:  அர்ஜுன் சம்பத் பாய்ச்சல்

சென்னை: ''புனித ஜார்ஜ் கோட்டையை வள்ளுவன் கோட்டையாக மாற்றுவோம்'' என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் திருவள்ளுவர் அரங்கில் ஆன்மிக அரசியல் மாநாடு நேற்று நடந்தது. மாநாடு குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாற்றாக தேசிய அரசியலை ஆன்மிக அரசியலை முன்னிறுத்தக் கூடிய மாநாடு; வளர்ச்சி அரசியலை முன்னிறுத்தக் கூடிய மாநாடு இது. இந்தியாவில் தமிழகம் தான் 'டாஸ்மாக்' மாநிலமாக உள்ளது.தமிழகத்தில் எந்த ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. நதிநீர் இணைப்பு நீர் மேலாண்மை எட்டு வழிச்சாலை தொழில் வளர்ச்சி என அனைத்தையும் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சி யினர் எதிர்க்கின்றனர்.தரமான கல்வியை கொடுக்க மத்திய அரசு முனைந்தால் இங்கே எதிர்ப்பு உருவாகிறது. அனைத்து வகையிலும் தமிழகத்தை தமிழர்களை வஞ்சிக்கும் அரசியலுக்கு மாற்றாக வளர்ச்சி அரசியலை நல்ல ஆன்மிக அரசியலை முன்னிறுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம்.

புனித ஜார்ஜ் கோட்டையை வள்ளுவன் கோட்டையாக மாற்றுவதற்காக இந்த மாநாடு.வரும் 2021 சட்டசபை தேர்தலில் ஆன்மீக அரசியல் எழுச்சி பெறும். ஆன்மீக அரசியல் மறுமலர்ச்சியை உருவாக்க இந்து மக்கள் கட்சி உழைத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கூடாது என்பது எங்கள் கருத்து. உள்ளாட்சி தேர்தலை கட்சி சின்னங்கள் அடிப்படையில் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.அரசியல் உள்நோக்கம் பிரதமர் மோடியின் மீது வெறுப்புணர்வு இருப்பதால் தமிழகத்தின் வளர்ச்சியை சிதைக் கிறார்கள் எதிர்க்கிறார்கள். ஹிந்து கலாசாரமே தமிழ் கலாசாரம்.இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டிற்கு முன் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை காவிக்கொடி பேரணி நடந்தது. மாநாட்டில் ஆதீனங்கள் மடாதிபதிகள் சிவனடியார்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X