பரமக்குடியில் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை: ரோடு விரிவாக்கப்பணிகள் எப்போது

Added : டிச 02, 2019
Advertisement
 பரமக்குடியில் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை: ரோடு விரிவாக்கப்பணிகள் எப்போது

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆங்காங்கே
சேதமடைந்துள்ளது.

ரோடுவிரிவாக்கப்பணிகள் எப்போது தொடங்கப்படும்என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில்
உள்ளனர்.மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பரமக்குடி நகராட்சி எல்லையான
காட்டுப்பரமக்குடி தொடங்கி, ஐ.டி.ஐ., வரை என சுமார் 3 கி.மீ., துாரம் உள்ளது.இந்நிலையில் கடந்த வருடம் மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலைப் பணிகள்நிறைவடைந்துள்ளது.
இதன்படி தெளிச்சாத்தநல்லுார் தொடங்கி, வாகைக்குளம் வரை ரிங்ரோடு அமைக்கப்பட்டுஉள்ளது.நகருக்குள் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், பஸ் போக்குவரத்து, டூவிலர், ஆட்டோக்கள்
என நகர் நெரிசலில் தவிக்கிறது. ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவருவதால் இதற்கு தீர்வு இன்றி பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

ஆகவே தற்போது உடனடி தீர்வாக பஸ் ஸ்டாண்ட் ரோட்டை சீரமைப்பதுடன்,ரோடு விரிவாக்க பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X