பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : டிச 02, 2019
Advertisement

கூடலுார்: பெரியாறு அணையில் கடந்த இரு நாட்களாக பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கடந்த 2 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை பெய்து வருகிறது. இதனால் 842 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்றுகாலை நிலவரப்படி வினாடிக்கு 1,854 கன அடியாக அதிகரித்தது. இதனால்,நீர்மட்டமும் சற்று உயர்ந்து 127.70 அடியாக(மொத்த உயரம் 152 அடி) இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 1,600 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4,401 மில்லியன் கன அடி.மழையளவு (மி.மீ.,): தேக்கடி 10, பெரியாறு 7, கூடலுார் 12.6, உத்தமபாளையம் 8.2, வீரபாண்டி 11, பெரியகுளம் 36.4, போடி 3.2, ஆண்டிபட்டி 10.6, அரண்மனைப்புதுார் 8.8, சண்முகாநதி அணை 8, மஞ்சளாறு 5, வைகை அணை 9.6. மி.மீ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X