முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் 50,என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர்
8 மாதங்களுக்கு முன்பு விடுப்பில் வந்துள்ளார்.கடந்த சிலநாட்களாகவே மனைவியுடன்
அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இதில் சக்திவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தந்தை இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி கீழத்துாவல் போலீசில் சக்திவேல் மகன் சபரிநாதன் கொடுத்த புகாரில் எஸ்.ஐ,சக்திவேல் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்.
Advertisement