பரமக்குடி:பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமைவகித்தார். அப்போது நெல்லுக்கு மாற்று பயிராக சிறுதானிய பயிர்குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பிரதம மந்திரி திட்டத்தில்விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில்18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து,பின்பு60 வயது வரை தாங்கள் தேர்ந்தெடுக்கும் தொகையை குறிப்பிட்டகாலத்திற்குள் கட்டினால் வயதான காலத்தில் மாதம் ரூ. 3 ஆயிரம்பென்சனாக வழக்கப்படும். பிரீமியம் கட்டும் இடைப்பட்ட காலத்தில்விவசாயி இறந்தால், வாரிசுக்கு
ரூ. 1,500 வழங்கப்படும், என விளக்கம்அளித்தனர்.
மேலும் விவசாய கருவிகள் ஊடுபயிர்கள் மற்றும் தெளிப்பு பாசனம்,உழவு மானியம், விதைப்பு மானியம் என விவசாயிகள் விண்ணப்பிக்கலாம், என்றனர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவக்குமார் செய்திருந்தார்.