பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் கனமழை தண்ணீர் தீவான ராமநாதபுரம்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடரும் கனமழையால் பல ஊரணிகள், குளங்கள் நிறைந்துள்ளது.

காலி நிலங்கள் அனைத்திலு





ம் தண்ணீர் தேங்கி தனி தீவு போல காட்சியளிக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடரும் கனமழையால் பல ஊரணிகள், குளங்கள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளம், அம்மா பூங்கா, சேதுபதி நகர், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம், எஸ்.பி., அலுவலகம் அருகில் கடம்பா நகர், என அனைத்து இடங்களும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.

பல இடங்களில் ரோட்டோரங்களில் காலி இடங்களில் குளம் போல் தேங்கிய மழைநீர் மறுகால் பாய்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். பல ரோடுகள் மழையால் சேதமடைந்துள்ளன.பல கிராமங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆனால் இதுவரை உயிரிழப்பு எதுவுமில்லை, என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் கனமழைக்கு வீடு இடிந்து ஆடு மட்டுமே பலியாகி உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X