கீழக்கரை:ஏர்வாடி ஊராட்சியில் உள்ள சின்ன ஏர்வாடி, சடைமுனியன் வலசையில்நேற்று அதிகாலை 2:00 மணியளவில் பெய்த கனமழையால்வீடுகளுக்குள் வெள்ள நீர் பாய்ந்தது.
ஓட்டு, குடிசை வீடுகளின்உள்ளே மழைநீர் சென்றதால், கிராம மக்கள் அதிகாலை முதல் சிரமத்திற்குள்ளாகினர். கீழக்கரை வருவாய்த்துறையினர்தண்ணீரை செல்லும் வழித் தடங்களை மண் அள்ளும் இயந்திரம்மூலம் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். புயல் மண்டபத்தில்பாதிப்பிற்குள்ளானவர்கள் தங்க வைக்கப்பட்டனர். மழைநீர் வெள்ளத்தால், 50 வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும், என கிராம மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE