தமிழ்நாடு

தட்டுப்பாடு :நெற்பயிருக்கு தேவையான யூரியா... :ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கவலை

Added : டிச 02, 2019
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிருக்கு தேவையான யூரியா
உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து
உள்ளனர்.
மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து பருவ மழை பெய்து வருவதால் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நெற்பயிருக்கு தேவையான யூரியா உரம் ஆரம்பம் முதலே கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள சிவகங்கை, துாத்துக்குடி மாவட்டங்களில் யூரியா வாங்கி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு விவசாயிக்கு ஆதார் கார்டு மூலம் ஒரு மூடை யூரியா வழங்கப்படுகிறது.இது போதுமான தாக இல்லை. குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்கும். 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்குபற்றாக்குறை உள்ளது. 10 ஏக்கரில் இரு முறை உரமிட குறைந்த பட்சம் 15 மூடை யூரியா தேவைப்படும். ஒரு மூடையைவாங்கி எந்த பயனும் இல்லை.

அதிக யூரியா கேட்டால் விற்பனையாளர்கள் டி.ஏ.பி., சல்பேட் போன்ற உரங்களை வாங்கினால் தருவதாக கட்டாயப்படுத்துகின்றனர்.விவசாயிகள் வேறு வழியின்றி பக்கத்து மாவட்டங்களான சிவகங்கை, துாத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்று யூரியா வாங்கும் நிலை உள்ளது.மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை அதிகாரிகள் இணைந்துதட்டுப்பாடு இல்லாமல் யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தேந்தல் விவசாயி செல்லக்குண்டு கூறியதாவது:பல ஆண்டுகளுக்குப்பின் நெற்பயிர்களுக்கு தேவையான மழை பெய்துள்ளது. நெற்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான யூரியா கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தொடக்க கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் யூரியா இல்லை என்கின்றனர்.

வேளாண் துறை அதிகாரிகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். உண்மையில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதா, செயற்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X