டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கலெக்டர் வீடு முற்றுகை

Added : டிச 02, 2019
Advertisement

ராமநாதபுரம்:அபிராமம் அருந்ததியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் கலெக்டர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அபிராமம் அருந்ததியர் தெரு, அம்பேத்கர் தெரு பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.கடையில் மதுஅருந்துபவர்களின் தொந்தரவு காரணமாக மக்கள் போரட்டம் நடத்தினர். இதில் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டது.தற்போது மீண்டும் அதே பகுதியில் கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

டாஸ்மாக் கடை அமைக்கப்படும் இடத்தில் பள்ளி, கோயில், சர்ச் உள்ளது. மது அருந்துபவர்களால் அப்பகுதியில் வீணாக பிரச்னைகள் ஏற்படும். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். வெளி கிராமங்களான உடையநாதபுரம், ஏ.புதுார், மணிபுரம், பகநதி, மேல கன்னிச்சேரி, சிறுமணியேந்தல், மாங்குடி, வெள்ளிமரைக்கான்பாப்பாங்குளம் ஆகிய கிரமங்களில் இருந்து மாணவர்கள் இப்பகுதி வழியே வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இப்பகுதியில் டாஸ்மாக் கடைதிறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை நிறுத்த வேண்டும், என அப்பகுதி மக்கள் கலெக்டர் முகாம் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டி.எஸ்.பி., பொன்ரகு போராட்டம் நடத்தியவர்களிடம் சமரசம் செய்துகலெக்டர் நடவடிக்கை எடுப்பார், என தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X