பொது செய்தி

தமிழ்நாடு

கொட்டுது மழை தேர்வுகள் ஒத்திவைப்பு

Added : டிச 02, 2019
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நேற்று நடக்கவிருந்த தேசிய வருவாய் வழி திட்டத்தேர்வு, இன்று மின்வாரியத்தால் நடத்தப் படவிருந்த கேங்மேன் உடல் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டன.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு இத்தேர்வு நேற்று (டிச.,1)
 கொட்டுது மழை  தேர்வுகள் ஒத்திவைப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நேற்று நடக்கவிருந்த தேசிய வருவாய் வழி திட்டத்தேர்வு, இன்று மின்வாரியத்தால் நடத்தப் படவிருந்த கேங்மேன் உடல் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டன.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு இத்தேர்வு நேற்று (டிச.,1) நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 மையங்கள் அமைக்கப் பட்டு 3,264 மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மின்வாரியத்தின் சார்பில் ராமநாதபுரத்தில் நாளை முதல் டிச., 11 வரை கேங்மேன் உடற்தகுதி தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்மழையால் உடற்தகுதி தேர்விற்காக அமைக்கப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் டிச.,2, 3 தேதிகளில் நடத்தப்படவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், இது குறித்தான விபரங்கள் உடற்தகுதி தேர்வில் பங்கேற்பவர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X