சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் மழைநீர் தங்கச்சிமடத்தில் அவதி

Added : டிச 02, 2019
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் வீடுகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றுங்கள் என முன்னாள் அமைச்சர், கலெக்டரிடம் மக்கள் தெரிவித்தனர்.ராமேஸ்வரம் தீவு பகுதியில் பெய்த கன மழையால் தங்கச்சிமடம் ராஜீவ்காந்தி நகர், ராஜா நகர், அய்யன்தோப்பு தெருவில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால், மீனவர்கள் வெளியேற முடியாமல் பாதித்தனர்.இந்நிலையில் தங்கச்சிமடம் வந்த முன்னாள்
 வீடுகளில் மழைநீர் தங்கச்சிமடத்தில் அவதி

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் வீடுகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றுங்கள் என முன்னாள் அமைச்சர், கலெக்டரிடம் மக்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் தீவு பகுதியில் பெய்த கன மழையால் தங்கச்சிமடம் ராஜீவ்காந்தி நகர், ராஜா நகர், அய்யன்தோப்பு தெருவில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால், மீனவர்கள் வெளியேற முடியாமல் பாதித்தனர்.இந்நிலையில் தங்கச்சிமடம் வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கலெக்டர் வீரராகவராவ், மழையில் பாதித்த மீனவர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கினர். அப்போது மீனவர்கள்,'வீடுகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற விரைவான நடவடிக்கை எடுங்கள், எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்'எனக் கூறி பொருள்களை அங்குள்ள மரத்தடியில் வைத்து ஆவேசமாக திரும்பி சென்றனர்.

பின் முன்னாள் அமைச்சர், கலெக்டர் மழைநீர் தேங்கிய பகுதியை பார்வையிட்டு, மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இங்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கி, வீடுகள் கட்டி தரப்படும், என உறுதியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X