பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் ராமர் தீர்த்தம் நிரம்பியது

Added : டிச 02, 2019
Advertisement
 ராமேஸ்வரத்தில் ராமர் தீர்த்தம் நிரம்பியது

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் பெய்த கன மழையால் திருக்கோயிலின் ராமர் தீர்த்த குளம் நிரம்பியதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமேஸ்வரத்தில் கடந்த இரு தினங்களாக 21 செ.மீ., மழை பெய்ததால் மார்க்கெட் தெரு, நேதாஜி நகர், இந்திரா நகரில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதித்தனர். மேலும் வறண்டு கிடந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ள 22 தீர்த்த கிணறுகள், திருக்கோயில் வெளியில் உள்ள ராமர் தீர்த்த குளம் கனமழையால் 10 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது.

மேலும் திருக்கோயிலின் லெட்சுமணர் தீர்த்த குளம், திருக்கோயில் வெளிபகுதியில் புனரமைத்த 60 தீர்த்த கிணறுகள், குளங்கள் மழையால் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை கண்ட பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X