ஒவ்வொரு போட்டியும் முதல் போட்டி! நினைத்து செயல்பட்டால் கிடைக்கும் வெற்றி

Added : டிச 02, 2019
Advertisement

பேரூர்:''டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வெற்றி பெற, நொடி பொழுதில் சிந்தித்து, அதிவேகத்தில் செயல்பட வேண்டும்,'' என்கிறார், டேபிள் டென்னிஸ் அம்பயர் ராஜேந்திரன்.இவர் தற்போது கேரள மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேபாளத்தில் நடந்து வரும், 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டி நடுவராக தேர்வாகியுள்ளார்.
நேபாளம் செல்லும் வழியில், கோவைக்கு வந்தவரை சந்தித்தோம்.* டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தது...?13 வயதில், மூணாரில் உள்ள 'ஒர்க் ஷாப்' கிளப்பில் சேர்ந்து, டேபிள் டென்னிஸ் விளையாட துவங்கினேன். ஒரு வருட தீவிர பயிற்சியால், 14 வயதில் மாவட்ட அளவில் நடந்த ஜூனியர் லெவல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன்; 18 வயதில் சீனியர் லெவல் சாம்பியன் பட்டம் பெற்றேன். 24 வயதில் மாநில அளவில் விளையாடத் துவங்கினேன். இப்போது மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் நடுவராகவும், பயிற்சியாளராகவும் செயல்படுகிறேன்.
சர்வதேச நடுவர் வாய்ப்பு கிடைத்தது பற்றி...?மிக்க மகிழ்ச்சி. 1998ல் கட்டாக்கில் நடந்த, காமன்வெல்த் போட்டிக்கு நடுவராக தேர்வானேன். பின்னர், 2013ல் ஐதராபாத்தில் நடந்த சர்வதேச போட்டிக்கு நடுவரானேன்.
இதுவரை, தேசியளவில், ஆயிரக்கணக்கான போட்டிகளுக்கும், சர்வதேச அளவில், 100 போட்டிகளுக்கு மேலும், நடுவராக இருந்துள்ளேன். தற்போது, நேபாளம் காத்மண்டுவில் நடக்கும், 13வது தெற்காசிய போட்டிக்கு நடுவராக தேர்வாகி உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள, 'டேபிள் டென்னிஸ் பெடரேஷன் ஆப் இந்தியா' டெக்னிக்கல் கமிட்டிக்கு நன்றி.
டேபிள் டென்னிஸ் விளையாட்டு பற்றி...?இந்த விளையாட்டை பொறுத்த வரை, நொடி பொழுதில் சிந்தித்து, அதிவேகத்தில் செயல்பட வேண்டும். எந்த திசைக்கு பந்து போகும், வரும் என்பதை அந்த நொடியில் யூகிக்க வேண்டும். கவனச் சிதறல் ஏற்பட்டுவிடக் கூடாது. கண் பார்வை தெளிவாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, உடல் வலிமை மிக முக்கியம். ஒவ்வொரு போட்டியையும், முதல் போட்டியாக நினைத்து விளையாட வேண்டும். அப்போது தான், மன அழுத்தம் குறைந்து, மனம் ஒருநிலைப்பட்டு, வெற்றி வசப்படும்.* சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாக 'டிப்ஸ்...?'குழந்தைகளுக்கு பெற்றோரே, முதல் குருவாக மாற வேண்டும். 3 - 5 வயதுக்குள், ஒரு விளையாட்டை தேர்வு செய்து பயிற்சியளிக்க வேண்டும். பிள்ளைகள் சமூக வலைதளங்களில் சிக்குவதை தவிர்க்க, விளையாட்டுகளில் ஆர்வத்தை துாண்ட வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளும் பிரபலம் அடைந்துள்ளது. 'தினமலர்' போன்ற முக்கிய முன்னணி நாளிதழ்கள், விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவது பாராட்டத்தக்கது. குழந்தைகளுக்கு, 3 - 5 வயதுக்குள், ஒரு விளையாட்டை தேர்வு செய்து பயிற்சியளிக்க வேண்டும். அவர்கள் சமூக வலைதளங்களில் சிக்குவதை தவிர்க்க, விளையாட்டுகளில் ஆர்வத்தை துாண்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X