ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் காளீஸ்வரா சி.சி., வெற்றி

Added : டிச 02, 2019
Advertisement

கோவை:மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், காளீஸ்வரா கிரிக்கெட் கிளப் அணி, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'காசா கிராண்ட்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடந்தது.பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்த போட்டியில், ஜி கிரிக்கெட் கிளப் அணி, காளீஸ்வரா கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.முதலில் விளையாடிய ஜி கிரிக்கெட் கிளப் அணி, 32 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 124 ரன் எடுத்தது. சிறப்பாக விளையாடிய செந்தில் குமார்- 4 விக்கெட் வீழ்த்தினார்.அடுத்து களமிறங்கிய காளீஸ்வரா கிரிக்கெட் கிளப் அணி, 37.2 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 127 ரன் எடுத்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக சுரேஷ்- 31 ரன் எடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X