முதலிடம் பிடித்த சூர்யா, சவுமியா! மினி மராத்தான் போட்டியில் வெரிகுட்

Added : டிச 02, 2019
Advertisement

கோவை:கே.பி.ஆர்., கல்வி நிறுவனம் சார்பில், மினி மராத்தான் போட்டி நடந்தது. மாணவர்கள் பிரிவில் சூர்யா; மாணவிகள் பிரிவில் சவுமியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.அரசூர், கே.பி.ஆர்., கல்வி நிறுவனம் சார்பில், 6ம் ஆண்டு 'லவ் கிரீன், லிவ் கிரீன்' விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி நேற்று நடந்தது.ஆண்கள், பெண்கள், சூப்பர் ஜூனியர் பிரிவு, சீனியர் பிரிவு, பள்ளி மாணவர்கள், மில் ஊழியர்கள் என, ஆறு பிரிவுகளில் போட்டிகளில் நடந்தது.
போட்டியை இன்ஜி., கல்லுாரியின் முதல்வர் அகிலா, கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் பாலுசாமி ஆகியோர், துவக்கி வைத்தனர். கருமத்தம்பட்டி துவங்கி, கணியூர், கொள்ளுப்பாளையம் வரை சென்று, கே.பி.ஆர்., கல்லுாரியில் மராத்தான் நிறைவடைந்தது.
பள்ளி மாணவர்கள் பிரிவில், ஏ.வி.ஏ.டி., பள்ளியின் சூர்யா, மாணவிகள் பிரிவில் கே.ஜி., பள்ளியின் சவுமியா ஆகியோர் முதலிடத்தை தட்டி சென்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, புரோ கபடி தமிழ் தலைவாஸ் அணி வீரர் அஜீத்குமார், கல்லுாரியின் சேர்மன் ராமசாமி ஆகியோர் ரொக்கப்பரிசு, சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினர். போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள் செயல்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X