இன்ஜி., ஆசிரியர்களுக்கான கிரிக்கெட்: அண்ணா பல்கலை 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Added : டிச 02, 2019
Share
Advertisement
கோவை:இன்ஜி., கல்லுாரி ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், அண்ணா பல்கலை கழக (மண்டல வளாகம்) அணி, 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்டத்தில், ஜோன்- 9, 10, 11 என, மூன்று மண்டலங்கள் கீழ், 100க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் உள்ளன.இக்கல்லுாரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி, பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்ப

கோவை:இன்ஜி., கல்லுாரி ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், அண்ணா பல்கலை கழக (மண்டல வளாகம்) அணி, 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்டத்தில், ஜோன்- 9, 10, 11 என, மூன்று மண்டலங்கள் கீழ், 100க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் உள்ளன.இக்கல்லுாரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி, பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. 19 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் 10 ஓவர் அடிப்படையில் நடத்தப்பட்டன.நேற்று நடந்த போட்டியில் அண்ணா பல்கலை கழக (மண்டல வளாகம்) அணி, ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் மோதின.முதலில் அண்ணா பல்கலை கழக (மண்டல வளாகம்) அணியினர், 10 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 67 ரன் எடுத்தனர்.அடுத்து களமிறங்கிய கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி, பத்து ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 52 ரன் எடுத்தது. அண்ணா பல்கலை கழக (மண்டல வளாகம்) அணி, 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டியில், யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரி அணி, கிரைஸ் தி கிங் இன்ஜி., அணிகள் மோதின.முதலில் விளையாடிய யு.ஐ.டி., அணி, 10 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 46 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய கிரைஸ் தி கிங் அணி, 7.2 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 47 ரன் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X