கோவை:மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில், ஐ.எஸ்.எப்., அகாடமி வீரர்கள் 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.கேரளா, 'ரூரல் கேம் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா' சார்பில், தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, மூணாறில் நடந்தது. 10 வயது, 14, 17, 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாணவ, மாணவிகளுக்கான ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வேல்கம்பு, நேரடி சண்டை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். கோவை, ஐ.எஸ்.எப்., அகாடமி சார்பில், 10 வீரர்கள் பங்கேற்று, 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். மாணவர்கள் பிரிவுஜி.ஆர்.டி., பப்ளிக் பள்ளியின் கிரிஷாந்த்- 1 வெள்ளி, அகில் ஆரியவ்- 1 தங்கம்; வின்சென்ட் மெட்ரிக் பள்ளி தமிழரசன்- 1 வெள்ளி; ஜி.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளியின் லிஷாந்த் ஸ்ரீராம்- 1 தங்கம் பதக்கங்களை வென்றனர்.நேவி பள்ளியின் சஞ்சய்- 1 தங்கம், ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் நிதிஷ்குமார்- 1 தங்கம்; ஜி.ஆர்.டி., கல்லுாரியின் முகிலன்- 1 தங்க பதக்கங்களை வென்றனர்.மாணவிகள் பிரிவுநேவி பள்ளியின் நேஹா- 1 தங்கம், கிருஷ்ணம்மாள் கல்லுாரியின் லட்சுமி பிரியதர்ஷினி- 1 வெண்கலம், ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் மதுமிதா - 1 வெண்கலம் பதக்கங்களை வென்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஐ.எஸ்.எப்., அகாடமியின் தலைவர் மதன் எஸ் ராஜா மற்றும் பயிற்சியாளர்கள் நந்தகுமார் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.