மாணவர்களுக்கான கால்பந்து இந்தியன் பப்ளிக் முதலிடம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
கோவை:மண்டல அளவில், பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், இந்தியன் பப்ளிக் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.சிங்காநல்லுார், சென்டர் ஸ்டுடியோ, பி.வி.எம்., குளோபல் பள்ளி சார்பில், 3ம் ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல கால்பந்து போட்டி, பள்ளி மைதானத்தில் நடந்தது.12 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஈரோடு, திருப்பூர், கோவை, காரமடை பகுதிகளிலிருந்து, 36 அணிகள்

கோவை:மண்டல அளவில், பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், இந்தியன் பப்ளிக் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.சிங்காநல்லுார், சென்டர் ஸ்டுடியோ, பி.வி.எம்., குளோபல் பள்ளி சார்பில், 3ம் ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல கால்பந்து போட்டி, பள்ளி மைதானத்தில் நடந்தது.12 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஈரோடு, திருப்பூர், கோவை, காரமடை பகுதிகளிலிருந்து, 36 அணிகள் பங்கேற்றன.மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், இந்தியன் பப்ளிக் பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில், பி.வி.எம்., குளோபல் பள்ளி அணியையும்; மாணவிகள் பிரிவில், திருப்பூர் கிட்ஸ் அகாடமி பள்ளி அணி, 2-0 என்ற கோல் கணக்கில், டெல்லி பப்ளிக் பள்ளி அணியையும் வென்றன.வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X