அபார வெயிட் துாக்கி வீரர்கள் 'வாவ்'

Added : டிச 02, 2019
Advertisement

கோவை:மாவட்ட அளவிலான பளுதுாக்கும் போட்டியில், வீரர்கள்தங்களின் முழு திறமையும் வெளிப்படுத்தி அசத்தினர்.கோவை மாவட்ட பளுதுாக்கும் சங்கம், ஷான் வெயிட் லிப்டிங் கிளப் மற்றும் யூ.டபிள்யூ.சி., இணைந்து நடத்தும், 4ம் ஆண்டு மாவட்ட அளவிலான பளுதுாக்கும் போட்டி, சவுரிபாளையம், மாரியம்மன் கோவில் திடலில் நேற்று நடந்தது.வீரர்களுக்கு, 55, 61, 69, 71, 81, 89, 96, 102, 109, 109+ எடை பிரிவுகளிலும்; வீராங்கனைகளுக்கு, 45, 49, 55, 59, 64, 71, 76, 81, 87, 87+ எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை அரிமா சண்முகசுந்திரம் துவக்கி வைத்தார்.55 கிலோ எடை பிரிவில் மதன்குமார், கந்தசாமி, சக்தி சரவணன்; 61 கிலோ எடை பிரிவில் ஆகாஷ், ஆனந்தகுமார், ரித்திஸ்; 67 கிலோ எடை பிரிவில் பத்மநாபன், பரணி பிரபாகரன், ஸ்ரீ ரஞ்சன்; 73 கிலோ எடை பிரிவில் ஜான்பீட்டர், ஜீவா, சத்ய ஜித் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ் மற்றும் பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த வீரர்கள், வேலுார் மாவட்டத்தில் நடக்கவுள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X